எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 27, 2013

இலை வடாம் சாப்பிட்டிருக்கீங்களா?

அடுத்து இலை வடாம் செய்யலாமா?  நான் செய்யலை.  ஆனாலும் செய்முறை சொல்றேன்.  இதுக்கும் அரிசி, ஜவ்வரிசி வேணும்.  ஒவ்வொருத்தர் கசகசா, ஜீரகம் போடறாங்க. அவங்க அவங்க வீட்டு வழக்கப்படி போட்டுக்குங்க.  எங்க வீட்டிலே வெறும் அரிசியும் ஜவ்வரிசியும் மட்டுமே.


கால் கிலோ அரிசிக்கு ஒரு பெரிய கரண்டி அல்லது ஐம்பது கிராம் ஜவ்வரிசி போட்டு ஊறவைத்து அரைக்கவும்.  அரைத்த மாவு இட்லி மாவு பதத்துக்கு இருக்கலாம்.  முதல்நாளே அரைத்து வைத்துவிட்டால் மறுநாளைக்குப் புளிப்பு வந்துவிடும்.  ஆகவே இதுக்குத் தனியா எலுமிச்சம்பழம் தேவையில்லை. பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.  இதையும் மறுநாள் வடாம் இடும்போது கலந்து கொண்டால் போதும்.  குழந்தைகளுக்குக் கொடுப்பதெனில் அல்லது பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுப்பதெனில் உப்பும், ஓமமும் மட்டும் போதும்.  துளி பெருங்காயம் சேர்க்கலாம்.

அரைத்த மாவைப் பச்சை மிளகாய் விழுது அல்லது உப்பு, ஓமம், பெருங்காயப் பவுடர் கலக்கவும்.  மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக் கலக்கவும்.  கரண்டியால் தூக்கி விடுகிறாப்போல் இருக்க வேண்டும்.  இப்போது ஒரு வாழை இலையை நன்கு துடைத்துக் கொண்டு அடுப்பில் இட்லிப் பானை அல்லது உங்களுக்கு இட்லி வழக்கமாக எதில் செய்வீர்களோ அதை அடுப்பில் ஏற்றி நீரை விட்டுக் கொதிக்க வைக்கவும்.  அடியில் ஒரு பாத்திரம் வைத்தால் தான் மேலே ஒற்றைத் தட்டை வைக்க முடியும்.  இப்போதெல்லாம் இலை வடாம் செய்யும் பாத்திரம் செட்டாகக் கிடைக்கிறது என்கிறார்கள்.  அதையும் வாங்கிக்கலாம்.  அதில் ஒரு நேரத்தில் நாலைந்து செய்யலாமென நினைக்கிறேன்.  வாழை இலையைத் துடைத்து எண்ணெய் தடவி ஒற்றைத் தட்டின் மேல் போட்டு மாவைக் கரண்டியில் எடுத்து மெதுவாகக் கரண்டியால் வட்டமாக எழுதவும்.  பின்னர் ஒரு இறுக்கமான மூடியால் மூடவும்.



ஓரிரண்டு நிமிடங்களில் வெந்துவிடும்.  வெளியே எடுத்து அப்படியே சாப்பிடப் பிடிக்குமெனில் அப்படியே சாப்பிடலாம்.  அல்லது நிழலில் உலர்த்தி எடுத்துச் சேகரம் செய்து வைத்துக் கொண்டு எண்ணெயிலோ மைக்ரோவேவ் அவனிலோ வைத்துப் பொரித்துச் சாப்பிடலாம்.  வாழை இலையில் ஒவ்வொன்றாக வைப்பதால் நேரம் ஆகுமென்பதால் இப்போது வந்திருக்கும் இலை வடாம் பாத்திர செட்டில் வைத்தால் ஒரு நேரத்தில் நாலைந்து கிடைக்கும்.  என்னிடம் பாத்திரம் இல்லை.  ஒற்றைத் தட்டில் வைத்துத் தான் வேக விடுவேன்.  கொஞ்சமாகப் பண்ணுவதால் சீக்கிரம் ஆகிவிடும். வயிற்றுக்கு நல்லது.

படம் கூகிளாரைக் கேட்டு வாங்கினேன்.

இதே போல்  பலாச்சுளையும் வெல்லம் தேங்காய் கலந்த பூரணத்தை எண்ணெய் தடவிய  வாழை இலையில் தடவிய மாவில் வைத்து இலையோடு மூடி வேக வைத்து எடுக்கலாம்.  அது பின்னர்.

22 comments:

  1. அந்த ஸ்பேஸ் குக்கரில் இருப்பது ஒரு தட்டுகு ஒரு வடாமா?
    இலை வடாம் என்றால் அவ்வளவு பெரிதா? சாப்பாடே வடாம் தானா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, உண்மையிலே இந்த குக்கரை நான் பார்த்தது கூடக் கிடையாது. நாங்க இலையில் தான் போடுவோம். :))) வாழை இலை வாசனையுடன் தேங்காய் எண்ணெய் தடவிய இலைவடாம் சூடாக எடுத்ததும் சாப்பிட நல்லா இருக்கும். கிட்டத்தட்ட சாப்பாடே வடாம் தான்னு வைச்சுக்குங்களேன். பிரசவம் ஆன பெண்கள், உடல்நலமில்லாதவர்கள் சாப்பிடனு கொடுக்கலாம், வயிற்றை ஒண்ணும் பண்ணாது. :))))

      Delete
    2. சின்னதாக இட்டாலும் பொரித்தால் பெரியதாக ஆகிடும். இந்தத் தட்டில் இவ்வளவு மாவை ஊத்தி இருப்பது சரியானு தெரியலை. படம் கேட்டதுக்கு கூகிளார் கொடுத்தார். :))))

      Delete
  2. Replies
    1. வாங்க டிடி, இது ரொம்பவே பிரபலம் ஆச்சே, மைதா மாவில் கூடச் செய்வாங்க. ஆனால் அதுக்கு முன்னாடி மாவை இட்லித்தட்டில் கொஞ்சம் வேக வைச்சுக்கணும். :)))

      Delete
  3. இப்போது தான் இதையே பார்க்கிறேன்... வேறு வழியில்லாமல் இப்படி சொல்ல வேண்டியதாகி விட்டது.... ஹிஹி...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. :) nice ( adjustment comment) Danabalan sir! :)

      Delete
    2. வாங்க மஹி, முதல்வரவுக்கு நன்றி.

      Delete
  4. Geetha madam, am reading your vadam posts regularly. All are interesting to read, but don't ask me whether I will make the vadam! :) ;)
    Thanks for the recipes! I may make it sometime.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. :))))

      Delete
  5. அட! இதுவும் உங்க வலைத்தளமா?
    எங்க வீட்டுல இலைவடாம் தட்டு இருக்கு. ஆனா இந்த மாதிரி குழிந்து இருக்காது. தட்டை தட்டையாக இருக்கும்.
    ஒரு தடவைக்கு 7 பண்ணலாம் (7 தட்டுகள்)
    என் அம்மா இதில் எக்ஸ்பர்ட்!
    நான்....ஹி.....ஹி....! நல்லா சாப்பிடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. அது சரி, இங்கே எப்படி வந்தீங்க? ஆச்சரியமா இருக்கே? :)))))

      Delete
  6. வாங்க ரஞ்சனி, நண்பர் நாகை சிவா, ப்ளாக் குவிப்பு வழக்கில் என்னை கூகிள் பிடிக்கப்போகுதுனு பயமுறுத்துவார். :))))) அதான் பல வலைப்பதிவுகளை ரகசியமாவே வைச்சிருக்கேனாக்கும். :))))

    இந்த இலை வடாம் வயிறு சரியில்லாதவங்க கூட தைரியமா சாப்பிடலாம். எங்க வீட்டிலே தட்டு இல்லை. இந்தப் படம் கூகிளார் கொடுத்தது. :))))

    ReplyDelete
  7. எங்கள் ப்ளாக்ல இடது பக்கம் இருக்கும் வலைத்தளங்கள்ல இலை வடாம் என்று பார்த்தேன். வந்துட்டேன்....!
    ரகசியம் அம்பலமாகிவிட்டது!

    பலாச்சுளை, தேங்காய், வெல்லம் பூரணம் வைத்துப் பண்ணுவது இலை அடை தானே?
    சமீபத்துல சென்னையில ஒரு கல்யாணத்தில் போட்டாங்க.



    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரஞ்சனி, இலை அடைதான். மலையாள முறைச் சமையல். இப்போல்லாம் என் கணவருக்கு ஷுகர் வந்தப்புறமா தித்திப்பெல்லாம் பண்ணறதில்லை. :))))))

      Delete
  8. டோக்ளா செய்யற பாத்திரம் மாதிரி இருக்கு..

    இலை வடாம் இவ்ளோ ஈசியா!!

    ReplyDelete
  9. இலை வடாம் ரொம்பவே சுலபம் தான் அமைதி. முதல்நாளே மாவை அரைத்துப் புளிக்க வைச்சுக்கணும். அது ஒண்ணு தான்! :)))))

    ReplyDelete
  10. இலைவடாம் வீட்டில் செய்ததில்லை. முன்பு போல இப்போ யாரும் சன்னமாகச் செய்வதில்லை. எனவே கடையில் வாங்கிச் சாப்பிடும் ஆசையும் போச்! ஒரு தடவைக்கு ஆறேழுதான்னா பொறுமையே போய் விடுமே!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், ஒரு இலையில் ஒரு வடாம் மட்டுமே என்பது போய் ஆறேழு வரைக்கும் வந்திருக்கே! ஹிஹிஹி, நாங்க சன்னமாய்த் தான் செய்வோம். இந்த வருஷம் தான் வேண்டாம்னு முடிவு செய்து போடலை. :))))கடையில் எப்போதுமே இவை மாதிரிப் பண்டங்கள் எதுவும் வாங்குவது இல்லை. விலையும் அதிகம், சுவையும் சுமார்.

      Delete
  11. இலை வடாம் எனக்கு பிடிக்கும். செய்ததில்லை....:) பிரசவம் ஆனப்போ பத்தியத்துக்கு சுட்டு போட்டாங்க. சில நாட்களுக்கு முன்னர் தான் என்னோட ஃப்ரெண்ட்( 98 வயது தாத்தா) வாங்கிக் கொடுத்தார். பச்சையாகவும், வத்தலாகவும்...:)

    ReplyDelete
  12. நல்லா இருக்கும் கோவை2 தில்லி. தட்டு இல்லையேனு யோசிக்காதீங்க. 200கிராம் அரிசியோட ஒரு சின்னக் கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊறவைச்சு அரைச்சுப் புளிக்க வைச்சு அப்புறமாத் தேவையானாக் காரம் இல்லைனா ஓமம், அல்லது ஜீரகம் போட்டு உப்புச் சேர்த்துச் செய்து பாருங்க. வெந்ததும் சூடாச் சாப்பிடலாம். காய வைச்சுப் பொரிச்சும் சாப்பிடலாம்.

    ReplyDelete
  13. ஏற்கனவே படிச்சுட்டேன்!

    ReplyDelete