எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, April 1, 2013

மாவடு போடலாம், வாங்க! நான் போட்டாச்சு!

நேத்திக்குத்/முந்தா நாள்(?) தற்செயலாக ஒரு பெண்கள் மலரை(?) படிக்கையில் மாவடு போடும் விதம் குறித்துச் சொல்லி இருந்தது.  அதிலே நீர் சேர்க்க வேண்டும்னு சொல்லி இருந்தாங்க.  அது தேவை இல்லை.  மாவடு போடும்போதே அதில் சேர்க்கும் உப்பு, மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் ஆகியவற்றில் உள்ள நீரை அதி தாராளமாக விட்டுக்கும்.  போதாதற்கு மாங்காயிலே உள்ள நீர் வேறே.  ஆகவே நீங்க நீரெல்லாம் சேர்க்க வேண்டாம்.

இப்போ மாவடு போடும் விதம் குறித்துப் பார்க்கலாமா?  போடுகிறபடி போட்டால் நீங்க குளிர்சாதனப் பெட்டியிலெல்லாம் வைக்கவே வேண்டாம்.  அதோடு உயர் ரத்த அழுத்தமோ, குறைந்த ரத்த அழுத்தமோ உள்ளவர்கள் கூட ஒன்றிரண்டு மாவடு ஒரு நாளைக்குச் சேர்த்துக்கொள்ளலாம். 

மாவடு உருண்டை இரண்டு கிலோ, அல்லதுகிளி மூக்கு மாவடு இரண்டு கிலோ,  ஐம்பது கிராம் மிளகாய் வற்றல், பச்சை மஞ்சள் கிழங்கு, அநேகமாய் எல்லாரிடமும் இருக்கணும்.  பொங்கலுக்கு வாங்கி இருப்பீங்களே, அதில் சேகரித்தது கூடப் போதும்.  அப்படி மஞ்சள் கிழங்கு இல்லைனால் ஐம்பது கிராம் நல்ல தூள் மஞ்சள் வாங்கிக்கவும்.  கடுகு சுத்தம் செய்து ஐம்பது கிராம், கல் உப்பு  நூற்றைம்பதில் இருந்து இருநூறு கிராம் வரை. (இதுவும் எதிலோ பார்த்ததில் இரண்டு படி உப்புனு போட்டிருந்தது.  மயக்கமே வந்து விட்டது.) உப்பு சரியாகப் போட்டாகணும். இல்லைனு சொல்லலை.  அதுக்கும் ஓர் அளவு இருக்கு.  முக்கியமாய் ஊறுகாயைப் போட்டு வைக்க ஜாடி அல்லது கண்ணாடி பாட்டில் பெரியதாக வேண்டும்.  கண்ணாடிக் கடைகளில் கேட்டால் நல்ல பெரிய பாட்டிலாகக் கிடைக்கும்.  வாய் அகலமாக இருக்கணும்.  தினம் தினம் கிளறி விடறாப்போல் இருக்கட்டும்.  விளக்கெண்ணெய் ஐம்பது கிராம்.

இப்போ மாவடு வாங்கிட்டீங்களா?  மாவடுவை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசிக்கோங்க.  காம்புகள் இருந்தால் பரவாயில்லை.  ரொம்பப் பெரிசாக இருந்தால் மட்டுமே அகற்றவும்.  இல்லைனால் வேண்டாம்.  அலசிய மாவடுவை நல்ல வடிகட்டியில் போட்டு வடிகட்டிக்கோங்க.  மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சளை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.  கொஞ்சம் கொரகொரப்பாய் இருந்தாலும் பரவாயில்லை.  உப்பை அப்படியே வைச்சுக்கவும்.

இப்போ மாவடு போடும் பாத்திரம்/ஜாடி/பாட்டிலை எடுத்துக்கவும்.  அடியில் ஒரு கை உப்பைப் போடவும்.  அரைச்சு வைச்ச மிளகாய், கடுகு, மஞ்சள் கலவையையும் அதே போல் போடவும்.  இப்போ அலசி வைச்சிருக்கும் மாவடுவை அதன் மேல் போடவும்.  இரண்டு மூன்று கை மாவடு போடலாம்.  பின்னர் மீண்டும் அதே போல் உப்பு, மஞ்சள் கலவை, மாவடு போடவும். இப்படியே போட்டுக் கடைசியில் மிஞ்சிய மாவடுகளைப் போட்டு அதன் மேல் மிச்சம் இருக்கும் கலவையையும், உப்பையும் போட்டுவிட்டு ஒரு தட்டால் அல்லது ஜாடி மூடியால், அல்லது பாட்டில் மூடியால் மூடவும்.  தனியாக வைக்கவும்.  மறுநாள் காலையில் குளித்துவிட்டு ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறவும். லேசாக ஜலம் விட ஆரம்பிச்சிருக்கும்.  இரண்டாம் நாள், மூன்றாம் நாள் மாவடு பாதி முழுகும் வண்ணம் ஜலம் விட்டிருக்கும்.  ஐந்து நாட்களில் அனைத்து மாவடுகளும் ஜலத்தில் முழுகிச் சுருங்க ஆரம்பிச்சிருக்கும்.

ஒரு சிலர் மாவடு சுருங்கக் கூடாதுனு சொல்றாங்க.  அதுக்காக ஐஸெல்லாம் போட்டு வைப்பாங்க. குளிர்சாதனப் பெட்டியிலும் வைப்பாங்க.  இதெல்லாம் செய்தால் மாவடு வெளியே அரை நாள் இருந்தாலும் அழுக ஆரம்பிக்கும்.  மாவடு எத்தனை சுருங்குதோ அத்தனைக்கு உப்புப் பிடிச்சு, உறைப்பும் ஏறி இருக்குனு அர்த்தம்.  இப்படி இருக்கும் மாவடு ஊறுகாய் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது. ஐந்து நாட்கள் ஆனதும் விளக்கெண்ணெயை மாவடுவின் மேலே ஊற்றி நன்கு கிளறி விடவும்.  மாவடு சாப்பிடுவதன் சூட்டை விளக்கெண்ணெய் சமனப் படுத்துவதோடு, வயிற்றுக்கும் நல்லது.  வெளிநாடுகளில் அல்லது இங்கேயே கடையில் வினிகர் ஊற்றிப் பதப்படுத்துவதை விட இது இன்னமும் பயனுள்ளது.  ஊறுகாய் கெட்டுப் போகாது.


சரி, மாவடு எல்லாம் தீர்ந்து போச்சு, இந்த ஜலத்தை என்ன பண்ணறது?  கோபமா வருதா?  கவலை வேண்டாம்.  ஜலம் எவ்வளவு இருக்குனு பார்த்துக் கொண்டு அதுக்கு ஏற்றாற்போல் பச்சைச் சுண்டைக்காய் அரைகிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி நன்கு கீறி மாவடு ஜலத்தில் ஊற வைக்கவும்.  நான்கைந்து நாட்கள் ஊறிய பின்னர் வெயிலில் உலர்த்தவும். சுண்டைக்காய் வற்றலை வறுத்துச் சாப்பிட்டால் அப்புறமா விடவே மாட்டீங்க! :))))

17 comments:

  1. அதிகப்படி உப்பு preservativeவா இருக்குமோ?
    விளக்கெண்ணெய் தான் படுத்துகிறது.

    இந்த முறையிலே முழு நெல்லிக்காய் செய்தா நல்லா இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை, அதிகப்படி உப்பு preservationக்குத் தேவையில்லை. விளக்கெண்ணெயும், கடுகும் தான் இங்கே அந்த வேலையைச் செய்கின்றன. விளக்கெண்ணெய் கட்டாயம் வேணும். மாவடு சாப்பிடுகையில் ஒண்ணும் தெரியாது. ஜூன், ஜூலையில் வருவீங்க இல்லை? அது வரை மாவடு இருக்கும். சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க. நெல்லிக்காயை இம்முறையில் போட்டால் அதிக நாள் தாங்காது. முழு நெல்லியாக இருந்தாலும் ஒண்ணு நல்லா எண்ணெயில் வதக்கி இருக்கணும். இல்லைனா கொஞ்சம் வேக வைச்சு எடுக்கணும். மிச்சம் எல்லாம் மேற்சொன்ன மி.வத்தல், கடுகு, மஞ்சள் தூள், உப்பு, நல்ல எண்ணெய் (பெருங்காயம்)நெல்லிக்காய்க்குப் பெருங்காயம் தேவை. மாவடுவுக்கு வேண்டாம். :)))))

      Delete
  2. /// உயர் ரத்த அழுத்தமோ, குறைந்த ரத்த அழுத்தமோ உள்ளவர்கள் கூட ஒன்றிரண்டு மாவடு ஒரு நாளைக்குச் சேர்த்துக்கொள்ளலாம். ///

    கொஞ்சம் சிரமம் தான்... முழுவதும் தவிர்ப்பது நல்லது...

    /// சுண்டைக்காய் வற்றலை வறுத்துச் சாப்பிட்டால் அப்புறமா விடவே மாட்டீங்க! ///

    உண்மை...

    பல பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, டிடி, முதல்லே நான் மாவடுவை நிறுத்த வேண்டி இருக்குமே! ஹிஹிஹி,

      சுண்டைக்காய் வற்றல் இப்போத் தான் மாவடு ஜலத்தில் ஊறவைச்சது வறுத்து சாப்பிட்டு வரேன். :)))))

      Delete
  3. மாவடு இம்முறை போடவில்லை. அலைச்சலில் வாங்க விட்டுப் போச்சு. பொதுவாக நாங்கள் வி.எ விடுவதில்லை. விடச் சொன்னவர்களும் முதல் நாளே விடச் சொன்னார்கள். வி.எ பிடிப்பதில்லை.

    கடையில் வாங்கும் மாவடு சஹிக்காது. பெரும்பாலும் மாங்காயாக இருக்கும். ஆனால் இம்முறை மதுரையில் வாங்கிய மாவடு சூப்பர் என்று சொல்ல வைத்தது. சிறிய வடுக்கள். நல்ல சுவையில். சுருங்கி, ஊறி நல்ல நிலையில் இருக்கின்றன. மணீஸ் (ஊறுகாய்) மாவடு என்று பெயர். 500 கிராம் 115 ரூபாய். மாகாளியும் பரவாயில்லை ரகத்தில் கொடுக்கின்றனர்.

    மிஞ்சிய நீரில் சாம்பார் சுண்டைக்காயா ஊற வைக்கச் சொல்கிறீர்கள்? நல்ல ஐடியாவாக இருக்கிறதே... செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளே, ஐநூறு கிராம் 115 ரூபாயா? கெட்டுது போங்க. நானும் வியாபாரம் ஆரம்பிச்சா நல்லா சேல்ஸ் ஆகும்போலிருக்கே! பேசாம ஒரு கடை திறக்க வேண்டியதுதான். :))))

      சாம்பார் சுண்டைக்காய்னு சொல்வீங்களா? நாங்க சாம்பார் மட்டுமில்லாமல் பச்சைச் சுண்டைக்காய்க் கறி, கூட்டு எல்லாமும் செய்வோம். வற்றலுக்கு மோரிலும் போடலாம், மாவடு ஜலம் மிஞ்சினால் அதிலும் போடலாம். சுவையாக இருக்கும். :))))

      Delete
  4. மூன்றாவது ஈடு மாவடு போட்டாச்சு. நம் வீட்டு மர மவடு நல்ல ருமானிவடு. கடக் ம்டக்னு கடிக்க நன்றாக இருக்கும். இரண்டாவது பெரிய குளம் வடு ஜலம் விட்டுக் கொண்டுவிட்டது. ,மூன்றாவது பாலக்கடு வடுன்னு வாங்கிக் கொண்டு வ்ந்திருக்கிறேன். அதற்கு காரம் வேண்டும் என்றார்கள். இல்லாட்டா கீத்து மாங்காயாப் போட வேண்டியதுதான்!!!
    வேப்பம்பூ நல்லதாக் கிடைத்தால் காயவைத்து வைக்கலாம். எல்லாம் லீவுக்கு வரவங்களுக்காகத் தான்:)

    ReplyDelete
    Replies
    1. நானும் மூன்று முறை மாவடு போட்டாச்சு வல்லி. எல்லாமே இங்கே கிடைப்பவை தான். வேப்பம்பூ அம்பத்தூரில் என்றால் ஆத்திலேயே கிடைக்கும். இங்கே எங்கே போறது? :))))

      Delete
  5. வி.எ???????????????????????????????????????//

    ReplyDelete
  6. வி.எ. விடுவது மாவடு அழுகாமலும், நெடுநாட்கள் நன்றாக இருக்கவும் பிரிசர்வேஷன் வல்லி, தேவை இல்லை எனில் விட வேண்டாம். :))))

    ReplyDelete
  7. எங்க அம்மா விளக்கெண்ணெய் விட்டதில்லை..
    சுண்டைக்காய் ஐடியா நன்னா இருக்கு மாமி.

    மாமி நீங்க மாகாளி சாப்பிடுவேளா....:)

    ReplyDelete
  8. வாங்க கோவை2தில்லி, மாகாளிக்கிழங்கு சின்ன வயசிலே சாப்பிட்டிருக்கேன். குழம்பு சாதத்துக்கு நல்லா இருக்கும். இப்போக் குழம்பும் சாப்பிடறதில்லை. மாகாளியும் தொடறதில்லை. சாப்பிட்டால் ஒத்துக்கறதில்லை. எல்லாம் இந்த ஆஸ்த்மா தொந்திரவால் தான். :))))))

    ReplyDelete
  9. எதுக்கு கேட்டேன்னா! மாகாளி சாப்பிடறவாளோட நாங்க பேசவே மாட்டோம்....:))))) அவ்வளவு அலர்ஜி.....:)

    அதுக்கு நாங்க வெச்ச பேர் மூட்டை பூச்சி மருந்து...:))

    ReplyDelete
  10. //எதுக்கு கேட்டேன்னா! மாகாளி சாப்பிடறவாளோட நாங்க பேசவே மாட்டோம்....:))))) அவ்வளவு அலர்ஜி.....:)//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிழைச்சேன். :)))))))))))))))

    ReplyDelete
  11. மாவடுவை கழுவி துடைத்து விளக்கெண்ணெ விட்டு பிசறிக் கொண்டு அப்புறம் உப்பு, மிளகாய் கடுகு உப்பு பொடிசெய்ததை போட்டு பின் கல் உப்பும் போட சொல்லி கொடுத்தார்கள் அம்மா.
    5ம் நாள் விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டும் என்று தெரியாது.
    இனி அடுத்த முறை செய்யும் போது அப்படி செய்கிறேன்.(இப்போது போட்டது தீர்ந்தவுடன் செய்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு. செய்து பாருங்க விளக்கெண்ணெய் பிரிசர்வேஷனுக்குத் தான்.

    ReplyDelete
  13. எங்கள் வீட்டிலெல்லாம் மாவடு ஜலம் தான் முதலில் தீரும். தயிர் சாதத்திற்கு மாவடு ஜலம் இல்லாமல் இறங்காது.

    ReplyDelete