எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 8, 2013

இன்னிக்கு விரதமா? கவலைப்படாதீங்க! கை கொடுக்கும் ஜவ்வரிசி

இப்போ ஜவ்வரிசி உப்புமா செய்முறை பார்க்கப் போறோம்.  எனக்கு முதல்முதலா அறிமுகம் ஆனது ராஜஸ்தானுக்கு முதல் முறை போனப்போ தான். கூடவே இருந்த நண்பர் மனைவி அவங்க வீட்டுக்காலை உணவாகச் செய்திருந்தாங்க.  செய்முறையும் சொன்னாங்க.  அவங்க செய்தது கொஞ்சம் சேர்ந்திருந்தாலும் பரவாயில்லாமல் ருசியாக இருந்தது.  ஆனால் நம்ம ரங்க்ஸுக்கோ, ஜவ்வரிசி உப்புமான்னாலே அப்போல்லாம் அலர்ஜி.  இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது?  இத்தனை வருஷத்தில் இப்போத்தான் இரண்டாம் முறையாப் பண்ணி இருக்கேன்னா பார்த்துக்குங்க.   யார் வீட்டில் ஜவ்வரிசி உப்புமா தரப் போறாங்கனு நானும் பொண்ணும் பார்த்துட்டு இருந்து ரெண்டு பேரும் அடிச்சுப்போம். வெட்கம் கெட்டதுங்கனு நினைச்சிருப்பாங்களோ! இருக்கும், இருக்கும்!  நினைச்சா நினைச்சுட்டுப் போகட்டும். விடுங்க. 

ஜவ்வரிசி உப்புமாவிலே அப்படி என்ன இருக்குனு கேட்கறீங்களா? ஒண்ணும் இல்லை; எல்லாமும் இருக்கு.  ஆனால் வட மாநிலங்களில் விரத தினத்திற்குனு வைச்சிருக்கும் ஆகாரம் இது.  அன்னிக்கு அவங்க அரிசியோ, கோதுமையோ சேர்க்க மாட்டாங்க. நாமெல்லாம் பலகாரம்னு அடை, தோசை, உப்புமா, இட்லி, சப்பாத்தினு சாப்பிடறதைப் பார்த்துட்டு அவங்களுக்குச் சிரிப்பு வரும்.  விரதம் என்றால் ஒரே வேளை தான் சாப்பாடு. அதுவும் இரவில். அவங்க பூஜை எல்லாம் முடிச்சு இந்த உப்புமாவைப் பண்ணி பகவானுக்கு நிவேதனம் செய்துட்டுச் சாப்பிடுவாங்க.  அடிக்கடி தேநீரும் குடிக்க மாட்டாங்க.  அவ்வளவு ஏன்!  ரொம்பக் கடுமையா விரதம் இருக்கிறவங்க எச்சில் கூட விழுங்க மாட்டாங்கனா பாருங்க.  மஹாராஷ்ட்ராவில் சோமவார விரதம் என்பது சர்வ சகஜம்.  அந்த விரததத்தைச் சின்னக் குழந்தை கூட ஏற்று விரதம் இருக்கும்.  

பலகாரம் என நாம் சொல்வது ஃபல் ஆஹார் என வட இந்தியர்கள் சொன்னதன் திரிபே என்பதே அங்கே போனப்புறமாத் தான் புரிஞ்சது.  ஃபல்=பழங்கள்.  விரத நாட்களில் சிலர் வெறும் பழங்களையே ஆஹாரமாகக் கொள்வார்கள்.  அவங்க தான் ஃபல் ஆஹார் எனச் சொல்வார்கள்.  முதல்லே போனப்போ ஒருத்தர் தனக்கு இன்னிக்கு ஃபல் ஆஹார்னு சொன்னதை நான் பலகாரம்னு புரிஞ்சுண்டு விதம் விதமாப் பலகாரம் பண்ணி வைச்சது தனிக்கதை.  இன்னொரு நாள் வைச்சுப்போம்.  அடுத்த பதிவில் ஜவ்வரிசி உப்புமா படங்களுடன் வெளிவரும்.  இது ஒரு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னோட்டம்.! இப்போல்லாம் முன்னோட்டம் போடணும்னு தோணிச்சு.  அதான்!

6 comments:

  1. அட முன்னோட்டம் ஸ்வாரசியம்....

    இங்கே இப்போதெல்லாம் வ்ரத் என வேக வைத்த உருளைக்கிழங்கையும் வ்ரத் வாலா கானா வும் நிறையவே சாப்பிடுகிறார்கள். மத்த நாளை விட வ்ரத் அன்னிக்கு நிறைய சாப்பிடுகிறார்கள் என ஒரு சம்சயம்.....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஆனால் மஹாராஷ்ட்ராவில்டாதுவும் புனே நகரத்தில் விரத நாட்களில் ஹோட்டல்களில் கூட இந்த சாபுதானா கிச்சடி தான் வைச்சிருப்பாங்களாம். நம்ம ரங்க்ஸ் எட்டு வருஷம் புனேயில் குப்பை கொட்டியதில் சாபுதானா என்றால் வெறுப்பின் உச்சத்துக்கே போயிட்டார்! :))) இப்போத் தான் சாபுதானா மெல்ல உள்ளே நுழைஞ்சிருக்கு! :)))

      Delete
  2. ஜவ்வரிசி உப்புமா? ஜவ்வரிசியில் மோர்க்கூழ்தான் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஜவ்வரிசி உப்புமா, ஜவ்வரிசி போண்டோ, ஜவ்வரிசி வடை எல்லாமும் உண்டு ஶ்ரீராம். ஜவ்வரிசியிலே விதம் விதமாச் செய்வாங்க மராட்டியர்கள். ஜவ்வரிசி உப்புமாப் படம் இன்னும் அப்லோட் செய்யலை. அதான் பதிவு வெளியிடத் தாமதம்! :)))

      Delete
  3. சாபுதானா கிச்சடியா?.. எனக்கும் பிடிக்கும். மஹாராஷ்ட்ராவில் விரத தினங்கள்ல கிச்சடி, சாபுதானா வடான்னு விதவிதமா சாப்பிடுவாங்க. ஹோட்டல்களில் மெனு கார்டுலயும் அச்சடிச்சிருக்கும். ஹோட்டல்ல சாப்பிடும்போது கூட விரதத்தைக் கடைப்பிடிக்கிறாங்க இங்கே உள்ளவங்க :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமைதி, சாபுதானா வடாவும் ஒருநாள் செய்துடலாம். :))) எண்ணெய் தான் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு. :)))

      Delete