எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 8, 2014

4--- தோசையம்மா தோசை, கோதுமை தோசை!

இப்போ அரிசி, பருப்பு ஊற வைச்சு அரைச்சுச் செய்யும் கோதுமை தோசை.  எங்க அம்மா வீட்டிலே இது ரொம்பவே ஸ்பெஷல்.  முன்னெல்லாம் கோதுமை அல்லது கோதுமை ரவையையும் சேர்த்து ஊற வைச்சு அரைப்பாங்க.  இதிலேயே வெல்லத் தோசையும் உண்டு.  இதெல்லாம் எங்க வீட்டிலேயும் நான் என் குழந்தைகளுக்குச் செய்து கொடுத்திருக்கேன்.  ரங்க்ஸுக்கு சர்க்கரை இருப்பது தெரியும் வரையும் அடிக்கடி வெல்ல தோசை செய்து சாப்பிட்டிருக்கோம்.  இப்போல்லாம் வெல்ல தோசையே செய்யறதில்லை. :))

முதலில் கோதுமையில் கார தோசை செய்யத் தேவையான பொருட்கள்:

அரிசி இரண்டு கிண்ணம்

துவரம்பருப்பு ஒரு கிண்ணம்

உளுந்து ஒரு கைப்பிடி

கோதுமை மாவு போடுவதெனில் அரைத்த பின்னர் சேர்த்துக் கலக்கலாம். அதற்கு இரண்டு கிண்ணம் கோதுமை மாவு.  தோசை முறுகலாக வரவேண்டுமெனில் கோதுமை மாவைக் குறைத்துக் கொள்ளலாம். கலக்கையில் நமக்கே பதம் புரியும்.  அல்லது கோதுமையோ கோதுமை ரவையோ போட்டால் அரிசியோடு சேர்த்து ஊற வைக்கவும். புதுசாய்ச் செய்பவர்கள் கோதுமை மாவே போட்டால் தான் தோசை வார்க்கவே வரும்.

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

மி.வத்தல்  நான்கு அல்லது ஐந்து

உப்பு, பெருங்காயம்

தோசை வார்க்க எண்ணெய்


அரிசி, பருப்பு, கோதுமை போட்டால் கோதுமை அல்லது ரவையை நன்கு களைந்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  ஊறிய பின்னர் மிக்சியில் அல்லது கிரைண்டரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.  நன்கு அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு உடனே தோசை வார்க்கலாம்.  தோசை வார்க்கும் முன்னர் மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக்கலக்கவும்.  கோதுமை போடாமல் மாவைப் போட்டால் அரைத்து எடுக்கும் முன்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அரைக்கும் கலவையில் சேர்க்கவும்.  அல்லது அரிசி, பருப்புக் கலவையை வெளியே எடுத்த பின்னர் கோதுமை மாவைப் போட்டுக் கட்டியில்லாமல் கலக்கவும்.  மாவு போட்டால் ஒரு அரை மணி நேரம் வைத்திருந்து விட்டு தோசை வார்க்கலாம்.

அடுத்து வெல்ல தோசை.

இதுக்குத் துவரம்பருப்பைப் போட்டால் விறைப்பாக் வரும்.  ஆகையால் கடலைப்பருப்புப் போடவும்.

இரண்டு கிண்ணம் அரிசி,

ஒரு கிண்ணம் கடலைப்பருப்பு

ஒரு கைப்பிடி உளுந்து

வெல்லம் தூள் செய்தது  அரைக்கிண்ணம்

தேங்காய்த் துருவல்  இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன்

தோசை வார்க்க நெய்யும், எண்ணெயுமாகக் கலந்து தேவை.

கோதுமை மாவு ஒன்றரைக் கிண்ணம்

அரிசி, பருப்பு வகைகளைக் களைந்து கொண்டு இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.  உப்புச் சேர்க்க வேண்டாம்.  மாவு நன்கு அரைபட்டதும் வெல்லத்தூளையும், தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.  இயன்றால் கோதுமை மாவையும் அப்போதே சேர்க்கவும்.  இல்லை எனில் அரைத்த மாவை வெளியே எடுத்ததும் கோதுமை மாவைச் சேர்த்துக் கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் நெய்யும், எண்ணெயுமாகக் கலந்த கலவையைத் தடவிவிட்டு தோசைகளாக ஊற்றவும். சூடாகப்  பரிமாறவும், நீங்களும் சூடாகச் சாப்பிடவும்.



10 comments:

  1. கோதுமை மாவு கார தோசையும், வெல்ல தோசையும் செய்வோம்தான். ஆனால் மாவு ப்ளஸ் காரப்பொடி அப்புறம் மாவு ப்ளஸ் கரைச்ச வெல்லம். இப்படித்தான் செய்வோம். நீங்கள் சொல்லியுள்ளபடி ஒருமுறை முயற்சிக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. சுவையில் மாறுபடும் ஶ்ரீராம். எப்போவானும் கேழ்வரகு மாவில் நீங்க சொல்றாப்போல் அரிசி மாவு கலந்து, வெல்லம், தேங்காய் சேர்த்தோ, காரம் சேர்த்தோ செய்வதுண்டு என்றாலும் அரைச்சுச் செய்யும் சுவை வருவதில்லை. :)))) அவரவர் பழக்கம். :)

      Delete
  2. இன்றே செய்து பார்த்து விடுகிறோம்.... நன்றி அம்மா....

    ReplyDelete
    Replies
    1. பாருங்க டிடி, நல்லா இருக்கும். :)

      Delete
  3. சாப்பிடலாம் வாங்க பார்த்தேன். ஒரேவழியா எல்லாத்தையும் சாப்பிடப் பார்த்தேன். ரொம்ப ருசி.நிதானமா சாப்பிடு மனஸேன்னு சொன்னேன். ரஸித்து ருசிக்க எல்லாமே கனகச்சிதம். திரும்ப வருகிறேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆச்சுனு தெரியலை, உங்களுக்கு நான் கொடுத்த பதிலைக் காணோம்!!!!!!!!!!!!!!!!!!! வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. மிகத் தாமதமாய்ப் பார்ப்பதற்கு மன்னிக்கவும். பல மாதங்களாக இந்தப் பக்கம் வரவே முடியவில்லை. :(

      Delete
  4. ரொம்ப நாள் கழித்து பதிவுகளை பார்க்க முடிந்தது. எல்லா அயிட்டங்களையும் செய்து பார்க்க ஆசை தான். அட்லீஸ்ட் சிலதாவது முயற்சிப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. முயன்று பாருங்கள் பட்டு ராஜ், இன்று எங்கள் வீட்டில் கோதுமை அரைச்சுச் செய்த தோசை தான் இரவு உணவு. :))) தாமதமாக உங்கள் கருத்தைப் பார்க்கிறேன். மன்னிக்கவும்.

      Delete
    2. முயன்று பாருங்கள் பட்டு ராஜ், இன்று எங்கள் வீட்டில் கோதுமை அரைச்சுச் செய்த தோசை தான் இரவு உணவு. :))) தாமதமாக உங்கள் கருத்தைப் பார்க்கிறேன். மன்னிக்கவும்.

      Delete
  5. ஹூம், பின்னூட்டத்துக்கு பதில் கொடுத்தால் போகலை. என்னோட கமென்டை நானே தொடர னு போட்டுப் போட்டால் போகுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்பநாட்களா வரலைனதும் இந்த வலைப்பக்கம் என் கிட்டே கோவிச்சுண்டுடுத்தோ? :)

    ReplyDelete